0094 21 226 055 kerudavil09298@gmail.com

About

About Our School
HISTORY

பாடசாலையின் வரலாறு

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம்’ என்ற பாரதியின் வார்த்தைக்கிணங்க எழுத்தறிவு பெற்று அறிவு சிறந்த சமூகத்தை உருவாக்க எழுந்ததே கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலை. ஆரம்பத்தில் இப்பாடசாலை பொன்னையாக்குருக்கள் வீட்டில் இலவச திர்ணைப் பள்ளிக்கூடமாக 1914 ஆம் ஆண்டில் அமைந்து இச்சுற்றாடலில் உள்ள ஐயர் பிள்ளைகளிற்கு மாத்திரம் கல்வி புகட்டப்பட்டது. காலப்போக்கில் மயில்வாகனக்குருக்களும் அமரர் பொன்னம்பலமும் அவரது பாரியார் அம்பாலிகை அம்மா அவர்களும் 3 பரப்பு விஸ்தரணம் கொண்ட காணியை யூதானம் செய்த பின்னர் 1918 இல் கொட்டில் போட்டு சகல மாணவர்களும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார்கள். 1922 இல் அரச நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டு 5 ஆம் வகுப்பு வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. 1930 இல் கனிஷ்ட பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு 8ஆம் வகுப்பு வரை சுல்வி பயிற்றப்பட்டது. 1956 இல் சைவ அபிவிருத்தி சங்க முகாமைத்துவத்திற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவ்வேளை முகாமையாளராக இருந்தவர் சட்டத்தரணி தாமேதரம்பிள்ளை. 1962 இல் அரசாங்கம் பாடசாலையைப்பொறுப்பேற்றது.

பாடசாலை ஸ்தாபகரின் மனைவியாகிய திருமதி மாணிக்கம்மா செல்வவிநாயகக்குருக்கள் பாடசாலை மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்காக தனது இல்லத்திலே மாடு வளர்த்து பால் காய்ச்சி வழங்கி வந்தார். அக்காலப்பகுதியில் இப்பாடசாலையில் கிணறு இல்லாமை காரணமாக அயல் வீடுகளில் உள்ள கிணறுகளிலேயே நீரினைப்பெற்று தமது தேவையை மாணவர்கள் பூர்த்தி செய்தார்கள். இதனால் கவலையடைந்த பாடசாலை ஸ்தாபகரின் மனைவி மாணிக்கம்மா தனது சீதனக்காணியை விற்று 1955 இல் இப்பாடசாலைக்கு கிணறு ஒன்றை வெட்டித்தந்கு பெருமைக்குரியவராவார். அது மட்டுமன்றி பாடசாலைக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்குச்சென்று மாணவர்களின் வரவை அதிகரித்து, வரவு பரிசோதி்க்கும் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றவருமாவார். இவ்வாறாக மாணவர்களின் அறிவுப்பசி, வயிற்றுப்பசி இரண்டையும் போக்கிய பெருமைக்குரியவர். இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்கள் அமரர் திரு.பொ. செல்வவிநாயகக்குருக்களும் அவரது பாரியாரும் ஆவார்.

ஆக்கம்:ஸ்தாபகர் வம்சம்

Our Facilities

எங்கள் மாணவர்கள் வளரவும் சிறந்து விளங்கவும் ஏற்ப பல வசதிகளை நாங்கள் வழங்குகிறோம்.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in omniem aperiam, eaquae vitae dicta sunt.

OUR VISION & MISSION

தூரநோக்கு & நோக்கக்கூற்று

அனைவரிற்கும் கல்வி, வாழும் வரை கல்வி என்ற கோட்ப்பாடுகளுக்கமைய எமது பாடசாலைப் பிரதேசத்திலுள்ள அனைவரிற்கும் தரமான கல்வியை வழங்கி சமூகத்தில் மேம்பாடடைய வைப்பது எமது பாடசாலையின் தூரநோக்காகும்.

அரச கொள்கைகளுக்கேற்ப பாடவிதான, இணைப்படவிதான செயற்பாடுகளை கிடைக்கக்கூடிய பௌதிக, நிதி, மனித வளங்களின் உச்சப் பயன்பாட்டின் மூலம் மாணவர் மையக் கல்வி முறைமைகளினூடாக யாவருக்கும் சமசந்தர்ப்பம் கிடைக்கக் கூடியதாக நடைமுறைப்படுத்தல் எமது பாடசாலை நோக்கக்கூற்றாகும்.